Tuesday, August 15, 2017

நீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்



துரியன் அவையில் பெண்ணிழிவு செய்யப்பட பின் பானுமதியின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அவளிடம் திரௌபதி பேசியிருந்தால் என்ன சொல்லியிருக்கக் கூடும்? இதை திரௌபதி சுதேஷ்ணையிடம் உரையாடும் அறக்கூற்று பகுதியின் மூலம் உய்த்துணரலாம்.

ஆணவம் அற்றோர் அறத்தில் நிற்பதில்லை. நான் அறத்தோள் என்று உணரும் ஆணவமே தெய்வங்களுக்கு உகந்த உணர்வு” என்றாள் திரௌபதி. “அரசி, தலை எழுந்து நிற்பதற்குத் தேவையானது முதுகெலும்பு. இந்த ஆணவத்தில் ஒரு துளியேனும் உங்களிடம் இருந்திருந்தால் இந்நகர்மேல் கீசகனின் நிழல் இப்படி கவிந்திருக்காது.”” – இதையே தன் மகள் முன்னிற்க தான் எங்கோ நின்ற கிருஷ்ணையின் அன்னை பானுமதியிடம் இதையே கூறியிருக்கக் கூடும்.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்