Sunday, August 27, 2017

மீறல்





ஜெ
வெண்முரசில்தான் ஒரு வரி வருமென நினைக்கிறேன். எல்லா மீறலும் உடலுக்கு எதிரான மீறல்தான். அதுதான் புஷ்கரனுக்கும் அவனுடைய குரூரம் ஆபாசம் எதையும் ஓரளவுக்குமேல் உடல் தாங்காது. அது கைவிட்டுவிடும். நரம்புகள் உடையும்வரை அவன் அதில் எடை ஏற்றிக்கொண்டே இருந்தான். ஒரு சின்ன குற்றம் செய்தால் தூங்கமுடியாது. ஆனால் அவன் பெரும் கொடூரங்களைச் செய்கிறான். பகல் முழுக்க அவன் மனம் உச்சத்தில் நிற்கிறது. அட்ரினலுக்கு ஓர் எல்லை உண்டு. அது கைவிட்டுவிட்டது. நரம்புகள் தளர்ந்து அவனை ஒரு காய்கறி மாதிரி ஆக்கிவிட்டன

செல்வக்குமார்