அன்புள்ள ஜெ,
வணக்கம். வாழ்வில் 
 மற்றுமொரு இனிய தருணம், தங்களோடு பகிர்ந்துகொள்ள. மகள் பிறந்திருக்கிறாள்.
 இரண்டரை வருடங்களுக்கு முன் முதல் மகவு பிறக்கும் முன்னே பெண் பிள்ளையாக 
இருந்தால் 'பிரயாகை' என்பது நானும் மனைவியும் எண்ணம் காத்த பெயர். முதல் 
குழந்தை ஆண் மகவு.  ஆகவே பெயர் காத்து, இரண்டு வருடங்கள் கழிந்து பிரயாகை 
பிறந்திருக்கிறாள்.
உங்களைச்
 சந்தித்தும், கடிதம் எழுதியும் நாட்களாகிறது.  நேரம் ஒழிந்து வாசிப்பிற்கு
 செல்லும் மனதை பெரும்பகுதி வெண்முரசு ஆட்கொண்டு விடுகிறது. உங்களை வருத்தி
  (புற உலகில்) உங்களில் நிகழும் தவம் வெண்முரசு. எழுத்திலோ பேச்சிலோ 
உங்களைத் தொடர்பு கொண்டு நாட்களாயினும், அகம் மானசீகமாக உங்களுடன் 
எப்போதும் தொடர்பிலேயே இருந்து கொண்டிருக்கிறது. அது இவ்வாழ்வின் நற்பேறு. 
நன்றி ஜெ.
நன்றி,
வள்ளியப்பன்

