Saturday, December 1, 2018

சுபாகு




ஜெ

கௌரவர்களில் கொஞ்சம் அறிவுடையவனாகவும் சூழ்ச்சிகள் செய்பவனாகவும் இருந்தவன் சுபாகு. ஆனால் அவனுடைய மனம் இந்த அத்தியாயத்தில்தான் வெளிப்படுகிறது. அவன் மகனாகிய சுஜயனைக் கொன்றவன் அர்ஜுனன். அர்ஜுனனின் மகன் அபிமன்யூவின் நலம் விசாரிக்கிறான். நல்ல மருத்துவனை அனுப்புவதாகச் சொல்கிறான். அவர்கள்மேல் எந்த பகைமையும் இல்லாதவனாக இருக்கிறான்

இந்த நாவல் முழுக்கவே கௌரவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு தீமையின் வடிவமாகவும் தனித்தனியாக தீமையேதும் இல்லாமல் கள்ளமற்ற நல்ல மனிதர்களாகவும் தென்படுகிறார்கள். இது சாத்தியம்தானா? நான் படித்தவரை பழங்குடிகள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்களிடம் ஒட்டுமொத்தமாகத்தான் வன்முறை இருக்கும். தனிப்பட்டமுறையில் சாந்தமானவர்களாகவே இருப்பார்கள்

கணேஷ் எஸ்