Friday, December 7, 2018

வரிகள்



எந்தத் தேக்கமும் அவ்வாறே முடிவிலாது நீடிக்க இயலாது. ஒழுக்கே புடவியின் இயல்பு. தேக்கம் என்பது ஒழுக்குக்காக ஒவ்வொரு அணுவும் தன் எல்லைகளை முட்டிக்கொண்டிருக்கும் நிலை மட்டுமே. எங்கேனும் ஏதேனும் ஒரு வாயில் உடைந்து திறந்தே ஆகவேண்டும்! - திசைதேர்வெள்ளத்தில் வந்த இந்த வரியை நான் தனியாகக்குறித்துவைத்துக்கொண்டேன்

இத்தகைய வரிகள் ஏன் இந்தவகையான நாவல்களில் வருகின்றன? டால்ஸ்டாய் டாஸ்டாயெவ்ஸ்கி நாவல்களில்தான் இந்த வரிகள். நீலகண்டப்பறவையைத்தேடி, அக்னிநதி நாவல்களிலும் இந்தவகையான வரிகள் உள்ளன. ஆனால் சுஜாதா நாவல்களிலோ ஹெமிங்வே நாவல்களிலோ இந்த வகையான வரிகள் இல்லை.

இந்தவரி இந்நாவலையே ஒட்டுமொத்தமாகச் சொல்வதுபோலவும் இருக்கிறது. இந்நாவலின் கதையோட்டத்திற்கு வெளியிலும் உள்ளது


கார்த்திக்ராஜ்

அன்புள்ள கார்த்திக்ராஜ்

கிளாஸிக்கின் குணம் பற்றி இந்தத்தளத்தில் எழுதப்பட்ட இரு கட்டுரைகளிலும் இவ்விளக்கம் உள்ளது. அதன் ஒட்டுமொத்தம் அதன் ஒவ்வொரு துளியிலும் இருக்கும். அதில் ‘யதார்த்தமான’ உரையாடல்கள் பெரும்பாலும் இருக்காது. ஆனால் நவீனத்துவப் படைப்புகள், பொழுதுபோக்குப்படைப்புகளில் இந்த அம்சம் இருக்காது

ஜெ