Thursday, December 13, 2018

சத்யவதி



ஜெ

கீழ்க்கண்ட வரிகளை பீஷ்மர் சத்யவதியிடம் சொல்கிறார். நான் பீஷ்மர் படுகளம் வந்தபின்னர் பழைய அத்தியாயங்களை போய் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது

உண்மையில் சத்யவதிமேல் பெரிய கசப்பு எனக்கிருந்தது. இவ்வளவு பெரிய அழிவும் அவளால்தானே என்று. ஆனால் அந்த அத்தியாயத்தை வாசித்தபோது அப்படித்தோன்றவில்லை. அழிவு அவளால்தான் என்று சொன்னாலும்கூட கண்ணன் என ஒருவன் வருவான், அவன் புதியவேதம் செய்வான் என்று அவள் அறியாமலேயே விதியின் கைகளுக்கு அவள் ஆயுதமாக இருந்திருக்கிறாள் என்றுதான் தோன்றுகிறது

சாரங்கன்