Tuesday, December 11, 2018

தெய்வமாக்குதல்



தெய்வமென மானுடரை ஆக்குவதே அவர்களை அகற்றுவதற்கான எளிய வழி- என்று சொல்லப்படும் வரி வெண்முரசில் பீஷ்மரைப்புரிந்துகொள்ள முக்கியமானது. அவர் தந்தை வடிவம். அந்த வடிவம் அவர்களை எல்லாரையுமே தொந்தரவுசெய்துகொண்டுதான் இருந்தது. அவர்கள் அதிலிருந்து மீண்டு வரவேண்டுமென விரும்புகிறார்கள். அதற்கான வழிகளைத்தான் தேடுகிறார்கள். அது தான் அவரை தெய்வமாக்கிவிடுவது. ]

நம்முடைய எல்லா தெய்வங்களும் நம்மால் கொல்லப்பட்டவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. ஃப்ராய்டியன் ஆய்வுகளில் பழங்காலத்தில் முதிர்ந்த தந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம் இருந்தது என்கிறார்கள். ஆகவேதான் தந்தையர் மீதான குற்றவுனர்ச்சியும் அதிலிருந்து நீத்தார் வழிபாடும் தோன்றியிருக்கிறது என்கிறார்கள். அதைத்தான் இங்கே பீஷ்மரின் வரலாற்றில் கண்டேன். அந்த வரியிலிருந்து சென்று பீஷ்மரைப்புரிந்துகொள்ளமுடிந்தது.

அவர் இனி குலதெய்வமாக ஆவார். சொல்லப்போனால் பீஷ்மர் இன்றைக்குவரை இந்தியர்கள் அனைவராலும் குற்ரவுணர்ச்சியுடன் கடவுளாக பார்க்கப்படுபவராகவே தென்படுகிறார்


ரா.கணேஷ்