Tuesday, December 11, 2018

பிச்சியும் பேய்ச்சியும்




ஜெயமோகன் அவர்களுக்கு

ஒரு படத்துடன் இந்த வரி எனக்கு வாட்ஸப்பிலே வந்தது

பிச்சியாவதென்ன, பேய்ச்சியாவதென்ன,
இங்குள எதுவுமாவதென்ன?
நான் அங்குளேன், அருகுளேன்,
எஞ்சுகிலேன், ஏதுமிலேன்!

நான் இருந்த மனநிலையை அப்படியே சொல்வதுபோலிருந்தது அந்த வரி. அதை நான் பலமுறை வாசித்தேன். அது ஆழ்வார்பாடல்களிலுள்ள வரி என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அதை ஒரு தோழியிடம் காட்டினேன். அவள்தான் அது நீங்கள் எழுதிய நாவலில் உள்ளது என்று சொன்னாள். அதன்பிறகுதான் நீலம் வாசித்தேன். நீலம் நாவலை இரண்டுமுறை வாசித்தபின்னர்தான் மீண்டும் போய் முதற்கனல் வாசித்தேன். இப்போது வண்ணக்கடல் வாசிக்கிறேன். அப்பப்போ நீலம் நாவலை மீண்டும் வாசிப்பேன். அந்த மொழி பித்துக்கொள்ளச் செய்கிறது. ராதையின் அந்தமனநிலையை வார்த்தைகளில் வடிக்க ஒரு பெரிய தேர்ச்சி தேவை. அது அந்தப்பித்துநிலையை அடைந்தால்தான் முடியும். முழுதாக வாசித்துவிட்டு எழுதுகிறேன்

எஸ்.ராதிகா.செல்வக்குமார்