Sunday, December 2, 2018

பத்துநாட்கள்




அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் இந்நாவல் ஒரு தனித்தன்மை கொண்டது. மகாபாரதப்போரில் முதல் பத்துநாளும் பெரிதாக ஒன்றுமே நிகழவில்லை. பெரும்பாலும் போர் விளையாட்டுக்கள்தான். சில கௌரவர்கள் கொல்லப்பட்டார்கள். சங்கன் ஸ்வேதன் போன்ற சில இளவரசர்களின் சாவு. அவர்களுக்கும் மகாபாரதத்தில் பெயர் குறிப்பிடப்படுவதைத் தவிர்த்தால் எந்த இடமும் கிடையாது. இந்தப்பத்துநாள்போரையும் பெரும்பாலும் கதைகளில் சுருக்கமாகக் கடந்துசென்றுவிடுவார்கள். அதைத்தான் நானும் எதிர்பார்த்தேன். அசங்கன் எல்லாம்கூட மகாபாரதத்தில் சாவின்போது மட்டுமே சொல்லப்படும் பெயர்கள்தான்

ஆனால் நீங்கள் இதை போர்நிகழும் விதம், ஆயுதங்கள், போர்முறைகள் வியூகங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்குவதற்காகப் பயன்படுத்திக்கொண்டீர்கள். குட்டிக்குட்டி அரசர்களின் பின்னணி மற்றகதைகளைச் சொல்லவும் பயன்படுத்திக்கொண்டீர்கள். ஒவ்வொருநாளும் காத்திருந்து வாசிக்கத்தக்கதாக கதையை மாற்றிவிட்டீர்கள். கதைசொல்லியால் எதையும் கதையாக ஆக்கமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது

சாரங்கன்