Tuesday, December 11, 2018

பசி வலி துயர்



ஜெ


சில வரிகள் நாம் வாசித்து கொஞ்சநாள் நம்முடன் இருக்கும். அதன்பின்னால்தான் அவை திறக்கும். திசைதேர்வெள்ளத்தில் வந்தவை இந்தவரிகள்

உண்ணாநோன்பு கொண்டவன் பசியாலும் நோயாளன் வலியாலும் தவமியற்றுவோன் துயராலும் விடுதலையடைகிறார்கள் என்பது தொல்நூல் கூற்று!

கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொல்வது. கீதையேதான். இந்த வரிகளின் அர்த்தம் எனக்கு என் பாட்டியை நினைவூட்டியபோதுதான் புரிந்தது. என் பாட்டி கடுமையான நோன்புகளை கடைப்பிடிப்பாள். பாதிநாள் கொலைப்பட்டினி. ஒருமுறை அப்பாவிடம் கேட்டேன். அப்பா சொன்னார்,  சின்னவயசில் பாட்டி நிறைய பட்டினி கிடந்து பழகிவிட்டாள் என்று

எனக்கு இப்போது தெரிகிறது. எங்கள் குடும்பத்திலே பாட்டிமாதிரி மனம் கனிந்தவர்கள் ஒருத்தர்கூட கிடையாது. பாட்டி ஒரு டிவைன்பீயிங். ஒரு செயிண்ட். அதற்குக் காரணம் அவர் அடைந்த துக்கங்கள்தான். அவை அவரை தூய்மைப்படுத்தின. பசி துக்கம் வலி மூன்றுமே நம்மை தூய்மைசெய்து விடுதலை அடையச்செய்கின்றன.

எம்.செல்வநாயகம்