Monday, December 3, 2018

பீஷ்மசயனம்




அன்புள்ள ஜெ

நான் ஒருமுறை காசிக்குச் சென்றிருந்தபோது ஒருவர் ஆணிகள் அறையப்பட்ட பலகையில் படுத்திருந்ததைப்பார்த்தேன். மிக இயல்பாகப் படுத்திருந்தார். அவரிடம் கேட்டபோது அதற்கு பீஷ்மசயனம் என்று பெயர் என்றும் அதில் படுத்தால் நரம்பின் நோய்கள் வராது என்றும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பீஷ்மர் படுத்திருப்பதைப்பற்றி உங்கள் வர்ணனையைப் படித்தபோது அதை நினைத்துக்கொண்டேன் . மிக எளிமையான உண்மை. ஆனால் இதை நாம் எப்படியெல்லாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று வருத்தமாக இருந்தது. அதோடு பல சினிமாக்களில் பீஷ்மர் களத்தில் சும்மா படுத்திருப்பார். அப்படிப்பட்ட பிதாமகனை மருத்துவர்கள் பார்ப்பதில்லையா என்ற சந்தேகம் எனக்கே வந்திருக்கிறது. நல்ல சித்திரம்

எஸ்.ஆராவமுதன்