Wednesday, December 12, 2018

சிம்மமும் கழுதைப்புலியும்



ஜெ

ஆரம்பம் முதலே வெண்முரசை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது அர்ஜுனனால் பீஷ்மர் கொல்லப்பட்ட இடத்தை வாசித்து அதைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான் குஹ்யசிரேயஸின் நினைவு வந்தது. அடாடா அதை எப்படி மறந்தேன் என நினைத்துக்கொண்டு அந்த அத்தியாயத்தை எடுத்து மறுபடி வாசித்துப்பார்த்தேன். குஹ்யசிரேயஸ் தான் அர்ஜுனன். சித்ரகர்ணிதான் பீஷ்மர். எவ்வளவு கவித்துவமாக மொத்தக்கதையும் முன்னரே உணர்த்தப்பட்டிருக்கிறது!


என்று குஹ்யஜாதை தன் மகனிடம் சொல்கிறாள். சிறுத்தைகளால் சூழப்பட்டு விழுந்த சித்ரகர்ணியின் நெஞ்சுக்குள் புகுந்து அதன் இதயத்தை பிடுங்கி உண்கிறது குஹ்யசிரேயஸ்
]

வியாசர் ஒரு கழுதைப்புலிக்குட்டி சிம்மத்தை கடித்து உண்பதைப்பார்க்கிறார் “ஏன் வியப்படைகிறீர் வியாசரே? ஷத்ரியர்களை நீர் முன்னரே கண்டதில்லையா?” என்றது. “நான் என்குலத்தை வாழச்செய்யப் பிறந்தவன்…தலைமுறைகள் தோறும் எல்லா குலங்களிலும் பேருயிர்களாகிய நாங்கள் பிறந்துகொண்டே இருக்கிறோம். ஈயிலும் எறும்பிலும் கிருமியிலும்கூட. என்று அந்தக் கழுதைப்புலிக்குட்டி பதில் சொல்கிறது

அந்தக்குறியீட்டுக்கதை இப்போது கண்முன் நிக்ழகிறது

சாரங்கன்

.