Wednesday, December 12, 2018

பீஷ்மரின் இடம்




ஜெ

முதற்கனல் நாவலில் ஒரு நிகழ்வு. பீஷ்மர் அந்த குடும்பத்துக்கே தந்தையாக தூணாக நிற்கிறார். அதற்காகத்தான் அவர் அவ்வளவு இழப்புக்களைச் சந்திக்கிறார். அவமானப்படுகிறார் ஆனால் பிள்ளைகளின் பெயர்சூட்டுச்சடங்கில் அவரிடம் அமைச்சர்கள் வந்து சொல்கிறார்கள்

பிதாமகரே, இந்த அஸ்தினபுரி உங்கள் மடியில் தவழும் குழந்தை. இதன் நலனையே நாடுபவர் நீங்கள். இதை உணவூட்டிப் புரப்பவர். இதன் அன்னை. ஆகவே இதன் நோய்களையும் பிடிவாதங்களையும் குறும்புகளையும் அனைவரை விடவும் நீங்கள் நன்கறிவீர்கள். வைதிகர்கள் நீங்கள் இங்கிருப்பதை விரும்பவில்லை

அந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாக பீஷ்மர் அஸ்தினபுரியில் அவருடைய இடமென்ன என்று அறிந்துகொள்வதாக இருக்கிறது. அவர் தான் அவர்களின் காவல்தெய்வம் ஆனால் காவல்தெய்வம் எப்போதுமே வெளியேதான்

இப்போதுகூட அவர் களத்திற்குவெளியேதான் தனித்துக்கிடக்கிறார்


செந்தில்குமரன்