Friday, June 8, 2018

சீதை



ஜெ

திரௌபதி தன்னை சீதையுடன் ஒப்பிட்டுப்பேசுகிறாள். இரு  இதிகாசங்களின் நாயகிகள். ஆகவே அவர்கள் எப்போதுமே ஒப்பிடப்படுகிறார்கள். ஆனால் அவர்களே தங்களை ஒப்பிட்டுக்கொள்வது ஒரு விசித்திரமான நிறைவை அளித்தது. அம்பையின் கதை வரும்போதே சீதையின் ஒப்பீடு வந்துவிட்டது. அவளை படகில் ஓட்டிவரும் குகர்கள் சீதையைப்பற்றிப் பாடுகிறார்கள். அதன்பின் குந்தியை பாண்டு பெண்பார்க்கப்போகும்போதும் சீதையின் கதை வருகிறது. சீதையின் கதை நினைவுபடுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது

ஆனால் உச்சம் திரௌபதி மாயாசீதையின் மறுபிறப்பு என்ற கதை. மிகப்பிற்கால தொன்மம் அது. ஆனால் அதை இங்கே கொண்டுவந்து இரண்டு இதிகாசங்களுக்கும் ஒரு தொடர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. சீதையைப்பற்றி பாஞ்சாலி சொல்லும்போது இதைச் சொல்பவள் மாயாசீதை அல்லவா என்ற எண்ணம் எழுந்து ஒரு பெரிய விஷன் உருவாகியது

சாரதி