அன்புள்ள ஜெ
செந்நா வேங்கை என்ற தலைப்பே குருதியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. மூன்று தலைமுறைகளாக விடாய்கொண்ட ஒவ்வொன்றும் குருதியால் தனிந்து சமன்செய்யப்பட களம்புகும் கதை.
வண்ணக்கடலில் சாதாரண மக்களுக்கு சலிப்பே மிகப்பெரும் எதிரி என்று சகுனி துரியோதனனிடம் சொல்வது எத்தனை பெரிய உன்மை அன்று முதல் இன்றுவரை
மனிதர்களுக்கு உள்ளுரபோர்மீது உள்ள ஆர்வம் அன்றாட வாழ்வின் மீது கொண்ட சலிப்பினால்தான். குருதிசாரலில் போர் அறிவிக்கபட்ட பின் களிவெறி கொண்டலையும் அஸ்தினாபுரி மக்களில் சலிப்பின் குரூரம் தான் முதலில் எனக்கு பட்டது.
சாத்யாகியின் மகன் சீனியை தோளில் சுமந்து நகைத்தபடி ஓடி உணவு உண்ணச்செல்லும் இளைய யாதவரை நோக்குகையில் குருதி பலி கேட்டு ஆர்பறிக்கும் மகாகாலனின் நடனம் என்றே மனம் என்னுகிறது.
தங்கராஜ்