Thursday, June 7, 2018

பழங்குடிகளின் அறம்



ஜெ

யுதிஷ்டிரரும் சகாதேவனும் எல்லாம் நிறைய அறம் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏராளமாக யோசிக்கிறார்கள்.  திட்டம் தீட்டுகிறார்கள். உண்மையான அறம் என்பது திட்டவட்டமாகவே இருக்கும். அதில் யோசிக்க ஒன்றுமிருக்காது. அசுரரும் நிஷாதரும் யோசிப்பதே இல்லை. அவர்களுக்குக் குழப்பங்களும் இல்லை. ஆகவே எல்லாமேதெளிவாக உள்ளன. அவர்களின் அறம்தான் ஒரு படி மேலானது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அது ஸ்பாண்டேனியஸ் ஆகவும் கூர்மையாகவும் உள்ளது

அதோடு அவர்களின் அறம் ஆண்கள் சம்பந்தமானதாக மட்டும் இல்லை. அதில் பெண்களுக்கும் முக்கியமான இடம் இருக்கிறது. அவர்கள்தான் முடிவெடுக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு திட்டவட்டமாக தங்கள் நியாயத்தைச் சொல்கிறார்கள்.

ஆனால் அவர்களின் போர் வேறுவகை. அவர்கள் எதிரிகளை முற்றாக அழிக்கிறார்கள். ஷத்ரியர் அப்படி முற்றாக அழிப்பதில்லை என்று முன்னரே வந்தது. இப்போதுகூட அழிக்காமல் விட்டு சமாதானம் செய்துகொள்வீர்கள் என்றுதான் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள் அறம் என்பது என்னென்ன சிக்கல்களுடன் இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது

ஸ்ரீனிவாஸ்