ஜெ
சாத்யகியின் பிள்ளைகள்
யுதிஷ்டிரரைக் கிண்டலடிப்பது அழகான காட்சி. அந்தப்பிள்ளைகளை மனசுக்கு மிகவும் பிடித்துப்போகிறது.
அவர்கள் கிண்டலடிப்பது முன்பு தூளிகன் என்ற குரங்கு யுதிஷ்டிரரைக் கிண்டலடித்ததை ஞாபகப்படுத்துகிறது.
பிள்ளைகளுக்கு நிதானமான அறம் என்றாலே சிரிப்புதான்
ஆனால் அந்தக்கிண்டலிலும்
பொருள் இருக்கிறது. நூல் தெரிந்தவர்கள் மேலும் மேலும் நூல்களைச் சொல்லி கடைசியில் துறவைச்
சொல்கிறார்கள். அதுதான் கிளாஸிஸம். சூதர்கள் காமம் குடி என பொருள் சொல்கிறார்கள். அது
ஃபோக். இரண்டுதரப்பையுமே பையன்கள் கிண்டலடிக்கிறார்கள்
சாத்யகி பையன்களைக் கண்டிப்பதுபோலத்
தெரிகிறது. ஆனால் அவன் அவர்களை ரசிக்கிறான் என்பது அந்தக்காட்சியில் தெரிகிறது. அரசனை
நடிகன் கிண்டல்செய்ய முடியுமா என்ற கேள்விக்கு முடியும் இரண்டுபேருமே குடித்திருக்கவேண்டும்
என்ற பதிலைக்கேட்டு அவன் புன்னகைப்பதை மிகவும் ரசித்தேன்
மகாதேவன்