அன்புள்ள ஜெ
பீஷ்மரின் இறப்பின்போது
கிருஷ்ணன் பேசும் காட்சி எரிச்சலை உருவாக்கியது. பல இடங்களில் நாம் உணர்ச்சிகரமாக இருக்கும்போது
கிருஷ்ணன் அதையெல்லாம் கடந்து நின்றுகொண்டு பேசும்போது அது இரக்கமற்றதாகத் தோன்றுகிறது.
அதிலும் சுபாகுவின் தூதின்போது மனம் கலங்கி கண்ணீர்விடும் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் பேசும்
இடமெல்லாம் குரூரமானது
நான் என் அப்பாவிடம்
ஃபோனில் பேசினேன். அப்போது அவர் அது குருவின் பேச்சு. ஞானத்தை மாணவனுக்கு அளிக்கும்
குரு அப்படி இரக்கமில்லாமல்தான் இருப்பார் என்றார். கசப்பு மருந்தை குழந்தைக்கு அளிப்பதுபோலத்தான்
அது என்றார். நீ ஆணவம் கொண்டாயல்லவா, நீ சின்னஞ்சிறு மனிதன் என்று போய் நின்று ஞானத்தை
வாங்கு என்றுதான் பீஷ்மர் முன் அர்ஜுனனை கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார்
கிருஷ்ணன் சாரதி