பிறந்த நாள் முதல் ஒவ்வொரு கணமுமென காத்திருக்கும் ஒரு தருணம் அணைகையில் வாழ்க்கை ஒட்டுமொத்தமாகவே பொருளோ பொருளின்மையோ கொள்கிறது-
உள்ளிருந்து எழும் கசப்பை எவரும் உமிழ்ந்து அகற்றிவிடமுடியாது
இந்த இரண்டு வரிகளையும் நான் திசைதேர்வெள்ளத்திலிருந்து மானசீகமாக எடுத்துக்கொண்டேன். இதை நான் பலமுறைச் சொல்லிக்கொள்ளவேண்டும் . ஏனென்றால் இதெல்லாமே நானே உணர்ந்தவைதான். இதையெல்லாம் இப்படி நான் வார்த்தைகளாக எழுதிக்கொள்ளவில்லை அவ்வளவுதான்
ஜெ, ஒரு பெண்ணுக்கு இப்படி உள்ளிருந்து எழும் கசப்பை அளிப்பது எது என்று உங்களுக்குத்தெரியும். அது முன்னாடி எப்பவோ நடந்தது என்றால் பரவாயில்லை. அதுவே வாழ்க்கை என்றால் அதைப்போல துன்பம் வேறு ஒன்றில்லை.
ஆகவேதான் எனக்கு முதல்வரி அவ்வளவு முக்கியம். அப்படி ஒரு தருணத்திக்கான காத்திருப்புதான் வாழ்க்கையின் நம்பிக்கை
என்