ஜெ
ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்- என்ற வரியை சத்யவதி பீஷ்மரிடம் சொல்கிறாள்.
முதற்கனல் நாவலில். விசித்திரவீரியன் இறக்கும்போது. அப்போது அது மிக அபத்தமான, குரூரமான
ஒரு வரியாகத் தெரிந்தது. ஆனால் இன்றைக்கு திசைதேர்வெள்ளத்தின் இறுதியில் பீஷ்மர் சாகக்கிடக்கும்போது
காலடியில் அம்பை அமர்ந்து கதறி அழும் காட்சியை வாசிக்கும்போது அங்கிருந்தே கதையை இங்கேதான்
கொண்டுவந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன். உங்கள் மனம் இத்தனை
தொலைவுக்கு இந்தக்கதையை முன்னரே ஊகித்துவைத்திருப்பது ஆச்சரியமானதுதான். பீஷ்மரை அவமானப்படுத்துகிறாள்
சத்யவதி என அதை வாசித்தபோது நினைத்தேன். ஆனால் இன்றைக்கு அது உண்மையாகவே சொல்லப்பட்டது
என்று தெரிகிறது
சரவணன்