அன்புள்ள ஜெ
திசைதேர்வெள்ளத்தின்
79 ஆவது அத்தியாயம் மிகமிகச் செறிவானது. கொந்தளிப்பான அத்தியாயம் அது. அதைப்புரிந்துகொள்வதற்கே
முழுநாளும் தேவைப்பட்டது. மீண்டும் மீண்டும் வாசித்தேன். ஒரு சிறுகதை போல ஒருமைகொண்டிருக்கிறது.
ஆனால் உள்ளே மேலும் கதைகள் இருக்கின்றன
காண்டீபத்தின்
ஆராதகனும் அர்ஜுனனின் மானசீகமான மகனுமாகிய சுஜயன் பீஷ்மரை அவன் கொன்றதுமே அவனை கைவிட்டு
விண்ணேகிவிட்டான். இனி அவனுக்கு அர்ஜுனன் தந்தை அல்ல. ஏனென்றால் அவன் தந்தையைக்கொன்றவன்.
அந்தப் பரிணாமம்தான் கதை. அதற்குள்தான் பலகதைகள் உள்ளன
கண்ணீருடன் வாசித்த
அத்தியாயம்
மகேஷ்