https://www.hayagriva.org.au/wheel-of-life/death-process/
அன்புள்ள ஜெ
பௌத்த கொள்கையில்
ஒருவர் சாகும்போது எட்டு நிலைகளாக உயிர் விலகிச் செல்கிறது. முதலில் மண் பிரிந்துசெல்கிறது.
அதன்பின் நீர் பிரிந்து செல்கிறது. அதன்பின்னர் தீயும் அதன்பின்னர் காற்றும் பிரிகிறது.
அதன்பின்னர் நான்கு நுண்மையான நிலைகள் உள்ளன. ஆகாயம் எண்ணம் ஆழ்நிலை போன்றவை விலகிச்செல்வது.
அதைத்தான் எட்டு வசுக்களும் விட்டுவிலகிச்செல்வது குறிக்கிறதா?
பீஷ்மரை விட்டு
விலகிச்செல்லும் வசுக்களின் பெயர்களின் அர்த்தம்தான் எட்டு தலைப்புகளாக அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றாக பார்த்தபோது எப்படி அதைக் கோர்த்து அமைத்திருக்கிறீர்கள் என்று புரிந்தது.
பிரமிப்பாக இருந்தது
மகேஷ்