Monday, December 3, 2018

சிறுகதையின் முடிச்சு




அன்புள்ள ஜெ

சுபாகு அர்ஜுனனிடம் தன் மகன் சுஜயனுக்கு நீர்க்கடன் செய்யும்படிக் கோருமிடம் உணர்ச்சிகரமானது. ஒரு தந்தை இன்னொருவரிடம் என் மகன் உங்க்ளைத்தான் தந்தை என நினைத்திருந்தான் என்று சொல்கிறான். அவனை கொன்ற அந்த மானசீகத் தந்தையிடம் அவனுக்காக நீர்க்கடன் செய்ய்ம்படி கோருகிறான்

அவனை அர்ஜுனன் கொன்றாலும்கூட அபிமன்யூவுக்காக மருத்துவ உதவி ஏற்பாடுசெய்கிறான் சுபாகு. அந்த அன்புக்கு அர்ஜுனன் தகுதியானவனா என்ற கேள்விக்குத்தான் அத்தியாயத்தின் இறுதியில் பதில் வருகிறது. அது ஒரு சிறுகதையின் முடிச்சுபோல இருக்கிறது

எஸ்.மணிகண்டன்