அன்புள்ள ஜெ,
பீஷ்மரின் களம்படுதல்
வரைக்கும் வரும்போது கதையின் ஆரம்பம் முதல் நிகழ்ந்தவற்றைத் தொகுத்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.
நாவல்முடிந்தபின்னர் வாசிக்கலாமென நினைத்திருந்தேன். மொத்தமாக எனக்குத் தோன்றும் எண்ணம்
என்னவென்றால் நாவல் இளைஞர்களின் சாவு வழியாக ஆரம்பித்து முதியவரின் சாவில் வந்து முடிந்திருக்கிறது
என்பதுதான். இதுதான் இந்த நாவலின் ஒருமை என தோன்றுகிறது
நாவலின் ஆரம்பத்தில்
இருந்து இளைஞர்கள் சாகிறார்கள். அசங்கனின் சாவுதான் அதில் மிகக்கொடுமையானது. அவனுடைய
கதாபாத்திரம் அந்த அளவுக்கு விரித்தெடுக்கப்பட்டிருந்தது. சாத்யகி கொள்ளும் வெறியும்
கொந்தளிப்பும் இந்நாவலின் உச்சங்களில் ஒன்று. அபாரமான பல புனைவுத்தருணகளை நினைவுகூர்கிறேன்.
சஞ்சயன் காணும்போர்க்களக்காட்சி அதில் ஒன்று
மாதவ்