Monday, December 10, 2018

கருவில் அறிவது



கருபுகும் பார்த்திவப் பரமாணுவில் வந்தமையும் உயிர் ஒரு வினாவை கொண்டுள்ளது. வாழ்வென்பது அவ்வினாவின் வளர்ச்சி.அதன் விடையைக் கண்டடையும் உயிர் நிறைவடைகிறது. அவ்விடை எஞ்சியிருக்குமென்றால் மீண்டும் பிறக்கிறது - மறுபிறப்பு பற்றிய இந்திய ஞானமரபின் நம்பிக்கையை இதில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கனவே பல ஞானிகள் சொன்ன வரிகள்தான் என்றாலும் அதை நல்ல தமிழில் கூர்மையாக வாசிக்கையில் நெஞ்சில் அறைவதுபோல இருக்கிறது.

இந்த உண்மையை உணர நாம் எதையுமே ஆராயவேண்டியதில்லை. நம் மனதையும் நம் வாழ்க்கையையும் கூர்ந்து நோக்கினாலே போதுமானது. நாம் எதற்காக வாழ்கிரோம்? நமக்கு மொழி தெரிய ஆரம்பிப்பதற்குள்ளாகவே நாம் அந்த அடிப்படைக்கேள்வியை மிகச் சூட்சுமகாககேட்க ஆரம்பித்திருப்போம். சின்னப்பிள்ளைகள்கூட அவர்களுக்குரிய ஒரு அகத்தேடலை, கேள்வியை கொண்டிருப்பதையும் அதற்குரியவகையில் அவர்களின் பெர்சனாலிட்டி உருவாகியிருப்பதையும் காணலாம். அனுபவங்களிலிருந்து அப்படிப்பட்ட கேள்விகள் உருவாகின்றன என்று சொல்லலாம். அப்படி அல்ல. ஒரே அனுபவம் நாலுபேருக்கு வந்தாலும் நாலு கேள்விகள்தான் வருகின்றன

மிச்சவாழ்க்கை முழுக்க நாம் தேடுவது அந்தக்கேள்விக்கான பதிலைத்தான். அறிந்து நிறைந்தவர்களைத்தான் நாம் ஞானிகள் என்று சொல்கிறோம்

சுவாமி