ஜெ
திசைதேர்வெள்ளத்தில்
படைகளின் உணர்ச்சிகளின் மாற்றங்களுக்கு ஒரு தர்க்கமில்லாத தர்க்கத்தை அளித்திருக்கிறீர்கள்.
சாதாரணமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. ஒரு நுட்பமான
கணக்கு அதற்குத்தேவைப்படுகிறது. பீஷ்மரின் சாவுக்கு முன்னால் இனிமேல் வெற்றியே இல்லை
சாவுமட்டும்தான் என்று உனரும்போது படைகள் கொண்டாடுகின்றன. கீழ்மையாக சிரிக்கின்றார்கள்.
கேவலப்படுகிறார்கள். ஏனென்றால் அப்போதுதான் அவர்களால் அந்தச்சோர்வை கடக்கமுடியும்.
அதோடு மறுநாள் அந்தக்கேவலமான கொலையை நியாயப்படுத்தத்தேவையான மனநிலையை விதி அவர்கலிடம்
உருவாக்குகிறது. அதன்பின்னர் பீஷ்மர் கொலைசெய்யப்பட்டபின்னர் அவர்களெல்லாம் கொஞ்சம்
அழுகிரார்கள். அதன்பின் கொலைவெறி. அதன்பின் நிம்மதியாகத் தூங்குகிறார்கள். அவர்களைப்புரிந்துகொள்ல
இந்த மனநிலை மாற்றங்களை எல்லாம் விதியால் உருவாக்கப்படுவது என்று புரிந்துகொள்வதே உகந்ததாகும்