ஜெ
பீஷ்மர் படுகளத்தில் கிடக்கும்போது ஆனால் ஆனால் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இந்த வகையான ஆச்சரியம் ஒன்றை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். என் அப்பா மரணப்படுக்கையில் இருக்கும்போது பாத்தாச்சா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் பேசாமலானபோதுகூட உதட்டில் அந்த வார்த்தையின் அசைவு இருந்தது
அதுக்கு என்ன அர்த்தம் என்று அப்போது தெரியவில்லை. இப்போதும் தெரியவில்லை. ஆனால் அந்தவகையான வார்த்தைகள் ஒரு பெரிய வாழ்க்கையின் சுருக்கமாக வாயில் வருபவை என்றும் அதை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது என்றும் இப்போது நினைக்கிறேன்
பீஷ்மரின் வாழ்க்கையில் ஆனால் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? அவரிடம் எல்லா நோன்புகளையும் மற்றவர்கள்தானே உருவாக்குகிரார்கள்? அவர் அவர்களுக்கு எதிராக மனதுக்குள் ஆனால் என்று சொல்லிக்கொண்டிருபபரோ?
எம்.முத்தையா