ஜெ
வெண்முரசிலே இந்த வரி வருகிறது என்று ஒரு டிவிட்டில்
வாசித்தேன்
மானுடர் விண்புகுவதற்கு இரண்டு நிறைவுகள் வேண்டும்.
இங்கு அவர்களின் பிறவிப்பணி முடியவேண்டும். இங்கிருந்து அவர்களை விண்ணேற்றும் அன்னமும்
நீரும் செல்லவேண்டும்
நான் 69 வயதானவன். என் அப்பா அம்மாவுக்கும் தாத்தாவுக்கும்
எந்தச் சடங்கையும் செய்தது கிடையாது. இந்த
வரி என்னைத் தொந்தரவு செய்தது.நான் கம்யூனிஸ்ட் ஆக இருந்தவன் தொழிற்சங்கப்பணி செய்தவன்.
இன்றைக்கு அந்த காலமெல்லாம் மறந்தே போய்விட்டது
உங்கள் சொந்தக்கருத்து என்ன? நாவலில் ஏதாவது கதாபாத்திரம்
இப்படிச் சொல்கிறதா? நீங்கள் இப்படி நினைக்கிறீர்களா?
செங்கோட்டுவேல்
அன்புள்ள செங்கோட்டுவேல்
ஏதேனும் ஒருவகையில் அவை செய்யப்படவேண்டும், எந்த
மதம் சார்ந்ததாக இருந்தாலும் சரி. அதை உறுதியாகவே சொல்வேன். நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன்
ஜெ