Monday, December 10, 2018

எந்தாய்!



பல்லாயிரம் சிறுமணிவிழிகளில் இமைகள் கீழிறங்கி பிறக்கவிருக்கும் ஒளியை கண்டுகொண்டன. சிறகசைவில் கிளையசைய மலர்ப்பொடிகள் தளிர்களில் உதிர்ந்தன. ‘இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்?’ என்றுரைத்தது மணிக்கழுத்து மரகதப்புறாத் தொகை...

நீலத்தின் இந்த வரியை இன்றைக்கு வாட்சப்பில் யாரோ அனுப்பியிருந்தார்கள். இதை திரும்பத்திரும்ப வாசித்தேன். இதை நீங்கள் எப்படி எழுதியிருப்பீர்கள்? இதை வரிவரியாக கோத்து எழுதினால் இந்த நாவலை எழுதிமுடிக்க எவ்வளவு நாளாகும்? ஆனால் நேரடியாகஒரே மாசம். நாவல் முடிந்துவிட்டது

இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்- என்று புலம்பிக்கொண்டே இருக்கிறது மனசு. இந்தவரி ஒரு பக்தியுகப்பாடலில் ஆழ்வார் ஒருவரால் எழுதப்பட்டது என்றால் நான் நம்பியிருப்பேன். ஆனால் இந்த வரி ஆழ்வார்களோ நாயன்மார்களோ எழுதிய எந்த வரிகளின் சாயல்கொண்டதும் அல்ல

ஜெ, ஒரு பெரிய பித்துநிலையில் இருந்திருக்கிறீர்கல். நீங்கள் புண்ணியம்செய்தவர்


ராதா சுரேஷ்