அன்புள்ள ஜெ
துண்டிகன் தன் உடலில் இருந்து கிளம்பி மீண்டும் தன் உடலைச் சென்றடையும் பயணம். இப்பயணம் முன்னர் உடலுடன் அவன் சென்ற அதேபாதையில்தான். அப்போது அவனை அடையாளமே காணாத அந்த ஏழு பெண்கள் உட்பட அனைவருமே அப்போது அவனை அடையாளம் காண்கிறார்கள். உடலுடன் சென்று பேசிய அனைவருமே வெறுமே ஒரு ஆவிவடிவமாக மட்டுமே காண்கிறார்கள்
உடலுடன் சென்றபோது சுபாகு பார்பாரிகனை மட்டுமே பார்த்தான். ஆவியாகச் சென்ற துண்டிகன் கண்ணுக்குத்தான் உடனிருக்கும் அரவானும் தெரிகிறான். அந்த பகுதியின் கனவுத்தன்மை நாவலுக்கு சரியான முடிவாக அமைந்தது
ஆர்.சுரேஷ்