அன்புள்ள
ஜெ
இணைப்புக்கள்
வழியாக பீஷ்மரைப்பற்றி விடம்பன் செய்யும் நக்கலைச் சென்று வாசித்தேன். பீஷ்மருக்கும்
ராமனுக்கும் இடையே அவன் ஓர் ஒற்றுமையைச் செய்துபார்க்கிறான். ஆச்சரியமாக இருந்தது.
இருவருமே ஒருவகையான நோன்புகொள்ளும் உறுதிகொண்டவர்கள். விளையாட்டுத்தனம் இல்லாதவர்கள்.
ஆகவே பெண்களுக்குப் பெரிய அநீதிகளை இழைத்தார்கள். அதைத்தான் விடம்பன் சொல்கிறான்.
ராமனின் வம்சம்தான் பீஷ்மர் என இன்றைக்கு அவர் மரணப்படுக்கையில்
கிடப்பதை வாசித்தபின் வாசித்தபோது ஒரு பெரிய தரிசனம் போல இருந்தது. ராமன் சென்று சரயூவில்
மடிந்ததும் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடப்பதும் சமம்தானே என்று நினைத்தேன்
சாரங்கன்