Tuesday, December 4, 2018

பீஷ்மசபதம்


அன்புள்ள ஜெ

பீஷ்மர் முள்படுக்கையில் படுத்திருக்கிறார். 53 நாட்கள் கிடந்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. போரெல்லாம் முடிந்து மொத்த குருகுலமும் அழிந்தபின்னர்தான் கிழவர் விடைபெற்றுச் செல்கிறார். அவர் காத்திருந்தது அந்த முழுமையான அழிவைப் பார்ப்பதற்காகத்தான்

பௌராணிகர்கள் பீஷ்மசபதம் என்றெல்லாம் பாராட்டிச் சொல்வார்கள். எனக்கென்னவோ பீஷ்மரின் சபதம்தான் அத்தனை அழிவுக்கும் காரணமாக அமைந்தது என்றுதான் தோன்றுகிறது

அந்த படுக்கையில் அவர் ஆனால் ஆனால் என்று சொல்லிக்கொண்டே இருப்பதை அப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன்


குமார் மூர்த்தி