தெய்வ கணங்களனைத்துமே எதிர்பாராதவை. எதிர்பாராத கணங்கள் அனைத்துமே தெய்வங்களால் அமைக்கப்படுபவை- என்றவரியை அப்படியே திசைதேர்வெள்ளத்தின் சுருக்கம் என்று சொல்லிவிடலாம். இந்நாவலில் உள்ளவை எல்லாமே தற்செயல்கள். ஒருவர் ஒருவரை எப்படி சந்திக்கிறார், எப்படி களத்தில்பொருதிக்கொள்கிறார் என்பதற்கு இந்த உலகம்சார்ந்த லாஜிக்கே கிடையாது. ஆனால் நுட்பமாகப்பார்த்தால் அவை தெய்வங்கள். அதைத்தான் சஞ்சயன் கண்களால் பார்க்கிறான். அங்கே என்ன நடக்கிறது என்று. அங்கே நடப்பவை எல்லாமே தெய்வங்களின் விளையாட்டு என்பது. எதிர்பாராத கணங்கள் எல்லாமே மனிதனால் அறியமுடியாத தெய்வங்களின் ஆடலில் இருந்து வாழ்க்கைக்குள் வருபவை. தெய்வங்கள் செயபவற்றை முழுமையாக மனிதனால் அறியவும் முடியவில்லை. குருஷேதிரப்போரை வாழ்க்கையின் குறியீட்டுச்சித்திரமாக ஆக்கிவிட்டது வெண்முரசு
எஸ்.மாதவன்