ஜெ,
பீஷ்மரின்
இறப்புக்கு முன்னால் வரும்போரின் எல்லா காட்சிகளுமே இப்போது வாசிக்கையில் குறியீடுகளாக,
வெவ்வேறு அர்த்தங்களை அளிக்கக்கூடியனவாக உள்ளன. அவர் பிறரைக் கொன்று அந்த உடல்களாலேயே
அவரை எவரும் தொடமுடியாதபடி அகன்றுவிட்டார். அவரைச்சூழ்ந்து அவர் உருவாக்கிய உடைசல்களாலேயே
ஒரு கோட்டை உருவாகியிருந்தது. அவர் தனிமையாக அந்தக்களத்திலே நிற்கிறார்.
அவர் மிக அகன்று சென்றுவிட்டார். இன்று அவர்மேல் தொடுக்கும் தொலைவுக்கு அம்பு செலுத்தும் மானுடர் எவருமில்லை என்று அவரைப்பற்றிச் சுருதகீர்த்தி சொல்லுமிடம்
ஆழமானது.
அவர் மேல் அம்புகள் தொடாத இடத்துக்குச் சென்றவர் திரும்பிவந்து அத்தனை அம்புகளையும்
வாங்கிக்கொள்கிறார், அந்தத்தனிமையை அவரே உடைக்கிறார். அவர் சாவை அவரே தேர்வுசெய்கிறார்
மகாதேவன்