ஜெ
பீஷ்மரின் வீழ்ச்சி நிகழ்வதற்குமுன்னரே அவருடைய சீடன் வீரசேனன் இவ்வாறு சொல்கிறான்
நம் வீழ்ச்சிகளுக்கும் சரிவுகளுக்கும் தந்தையரை குறைசொல்வதற்கே நாம் பயின்றிருக்கிறோம். தந்தைவடிவானவருக்கு நிகராக குடிப்பழியும் குலவஞ்சமும் வேறெவருக்கும் அளிக்கப்படுவதில்லை
இதை நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பங்களீலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். நெடுங்காலம் உயிர்வாழும் எந்த தந்தையும் பிள்ளைகளின் வசைகளை வாங்கிக்கொண்டுதான் உயிர்விடுவார்கள். வேறுவழியே கிடையாது
ஏனென்றால் தந்தை என்பவன் ஒரு ஆசிரியன். கடவுள். கடவுளைப்போல மனுஷனால் திட்டப்படுபவன் உண்டா? ஆசிரியர்களைத்தானே நாம் மனம்போனபடி வசைபாடியிருப்போம்?
நாம் நம்முடைய பொறுப்பை அவர்களை ஒப்படைக்கிறோம். ஆகவே நம் தோல்விகளுக்கான பொறுப்பையும் அவர்களிடமே அளித்துவிடுகிறோம்
ராகேஷ்