ஜெ
வென்முரசில் ஏளனம் செய்யும் சூதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். முதற்கனலில் இருந்து வருகிறார்கள். முதற்கனலில் தோன்றும் அந்த முதல் சூதரின் வாரிசு கடைசியிலும் வந்து நிற்கிறார்
யுதிஷ்டிரர் புன்னகைத்து “திறன்மிக்க சொல்லாளர். தென்னகத்து வேடர்கள் அம்புகளில் நஞ்சுபூசும் கலை தேர்ந்தவர்கள் என்பார்கள். வேட்டைவிலங்கு மயங்கிவிழவேண்டும், ஆனால் அதன் ஊனில் நஞ்சு ஏறிவிடக்கூடாது. அந்த அளவு அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் சொல்நஞ்சுக் கலைதேர்ந்தவர்” என்றார்.
என்று வரும் இடம் அவர்களின் கதைக்கலை எவ்வளவு கூர்மையானது என்பதைக் காட்டுகிறது. அவர் இந்த வசைச்சூதர்கள் ஒருவகையில் அக்காலகட்டத்தின் மனசாட்சி. இந்தக்காலகட்டத்திலிருந்து அங்கே செல்லும் விமர்சனக்குரல். அவர்கள் பூடகமாகவே நகைச்சுவை சொல்கிறார்கள். யோசித்தால் மெல்லிய புன்னகை வரும், அவ்வளவுதான். அந்த நஞ்சுதான் ஆழமானது. அதைத்தான் யுதிஷ்டிரர் சொல்கிறார்
சேது