அன்புள்ள ஜெ
நலம்தானே? நானும்
நலம். கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன. ஒரு சிறு குறிப்பாவது எழுதவேண்டும் என்று நினைப்பதுண்டு.
ஆனால் எழுத ஆரம்பித்ததுமே எவராவது எழுதிய கடிதம் நினைவுக்கு வரும். அதில் எல்லாமே சொல்லப்பட்டிருக்கும்.
ஆகவே விட்டுவிடுவேன். இன்றைக்கு எழுதவேண்டும் என்று தோன்றியது. காரணம் திசைதேர்வெள்ளத்தின்
முடிவு. துண்டிகன் சிகண்டியைக் காணும் இடம். பீஷ்மரின் மறைவுக்குப்பின்னர் மொத்தமாக
கௌர்வர் பாண்டவர் திரௌபதி அனைவருமே என்ன உணர்கிறார்கள் என நான்கு அத்தியாயங்கள் வழியாகச்
சொல்லிவிட்டீர்கள். நேராக சிகண்டிக்கு வந்து முள் நிற்கிறது. அவர் என்ன உணர்கிறார்
என்று சொல்லப்படவே இல்லை. ஒரு நாவல் முடிவதற்குச் சரியான இடம் அதுதான். நன்றி
சுதாகர்