ஜெ
பீஷ்மரைப்பற்றிய
விடம்பனின் எள்ளலை மீண்டும் சென்று வாசித்தேன். பீஷ்மருக்குத் தேவையானது என்ன சான்றோரே? அவர் நம் நாட்டின் பிதாமகர்.
அவருக்குத் தேவையானது எள்ளும் தண்ணீரும். அவர்செய்த தியாகங்களுக்காக நாம் அவரை எள்ளால்
ஆன மலைமீது ஏற்றி கங்கையில் மிதக்கவிடவேண்டும். ஓம் அவ்வாறே ஆகுக என்று அவர்
சொல்கிறார். அவர் இன்று அத்தனை கௌரவர்களும் பாண்டவர்களும் குற்றவுனர்ச்சி கொள்ளும்படியாக
போர்க்களத்திலேயே சாகாமல் கிடப்பதைப்பார்க்கும்போது அதுதான் தோன்றுகிறது. அவருக்கு
என்ன வேண்டும்? எள்ளும் நீரும் அல்ல. எள்ளால் ஆன மலை. அது அவருக்குக் கிடைத்துவிட்டது.
இத்தனை பக்கங்களுக்கு நாவலின் இந்த பார்வையின் ஒருமை நீண்டு வந்திருப்பதை நினைத்தால்
ஆச்சரியமாகவே உள்ளது
சுப்ரமணியம்,.