Friday, May 1, 2015

தன்மக்கள்



ஜெ

நீண்டநாள் கழித்து கடிதம் போடுகிறேன். கொஞ்சநாள் வாசிக்கமுடியவில்லை. ஒரு இருபதுநாள் தினம் நாலு அத்தியாயம் வீதம் வாசித்து வந்துசேர்ந்தேன்

தன் மைந்தர்கள் இணைந்து வந்ததைக் கண்டு திருதராஷ்டிரனுக்கு முன்னாடியே அவருடைய ஆன்மாவாகிய விப்ரம் கொந்தளிப்பது மிக முக்கியமானது என்று தோன்றியது. அவர் அரசரிடம் சென்று ‘நம் பிள்ளைகள்’ என்று சொல்வதைக் கண்டு நெகிழ்ந்துவிட்டேன். அவர் அந்தளவுக்கு அரசருடன் ஐக்கியமாகியிருக்கிறார்

திருதராஷ்டிரனின் அந்த உணர்ச்சிமிகக்ந் இலையை எத்தனை முறை வாசித்தாலும் அலுக்கவில்லை. அவர் மௌனமாக அழுவது தன்னந்தனிமையில் அழுவதுபோல இருக்கிறது என்பதே முக்கியமான விஷயம். அவருடைய மனம் எந்த அளவுக்கு நொந்துபோயிருக்கிறது என்பதை காட்டுகிறது

அவர் பாண்டவர்களிடம் அன்பை வெளிப்படையாகக் காட்டி தன் பிள்ளைகளிடம் அதை சுருக்கமாகக் காட்டுவது அவ்ருக்கு தன் பிள்ளைகளிடம்தான் பாசம் அதிகம் என்பதற்குத்தான் ஆதாரம்

சுந்தரம்