Friday, May 1, 2015

யாதவலீலை

 
 
இன்றைய அத்யாயம் படித்து கண்ணீர் வடிக்காத மனிதர்களே இருந்திருக்க வாய்ப்பில்லை, நாம் படித்துக்கொண்டே அழுது கொண்டிருப்பதையும், அந்த யாதவ கிருஷ்ணன்  கைகட்டி புன் முறுவலுடன் அறையின் எதோ ஒரு மூலையில் நின்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்,
 
//புலிக்குருளைகள் தட்டித்தட்டி விளையாடிய காலொடிந்த முயல். அந்தத் தருணத்தை திரும்ப எண்ணியபோது உடல் பதறியது. //
 
''விஜயையும் , தேவிகையும், இந்த புள்ளயாண்டானை என்ன பாடு படுத்தறா, பாவம் கொழந்த'' என்று தான் தோன்றியது,  பழிவாங்கும் தருணம் போல மனிதர்கள் மகிழ்வது பிறிதில்லை என்று இன்றைய அத்யாயம் காட்டியது, 
 
சாத்யகியை விட்டு கணிகரை பார்துகொன்டே இருக்க வைத்து அவரை நிலை இழக்க செய்ததுபோல் , இதுவும் யாதவ கிருஷ்ணனின் வேலையா ...என்று ஐயம் எழுகிறது.

மீண்டும் யாதவனின் லீலையான தருமன், துரியதனன் சந்திப்பு, இன்றைய உச்சம் , அதிலும் கர்ணன் இல்லாத தருணம் , எதோ ஒன்றை சொல்ல விளைகிறது,  ஒருவேளை கர்ணனின் ஆணவம் இந்த நெகிழ்வான தருணத்தை ஏற்காமல் போகலாம்.இதிலும் அரசு சூழ்ச்சி என்று துரியோதனனிடம்  முறையிடலாம், என்றே தோன்றியது.\
 
சௌந்தர் ராஜன்