Sunday, May 3, 2015

வண்ணக்கடலில் தருமன்

 
 
வண்ணக்கடலில் எடுபடாத பாத்திரம் என தருமனை ஒருமுறை விவாதத்தில் எழுதினேன். இப்போது வண்ணக்கடலை பற்றி மீண்டும் நினைத்து பாரக்கும் போது அதில் உன்மையாகவே தனியாக தெரியும் பாத்திரம் என்பது தருமன் தான். வண்ணக்கடலில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒரு வண்ணம். அதில் தனியாக தெரிகிறான் தருமன்.

அதற்கு காரணம் அவன் நோக்கம். அவன் எண்ணங்களை, அச்சத்தை எது கட்டமைகிறதோ அது. அவனது அறவுணர்ச்சி. உயிர்களின் மேல் அவன் கொண்டுள்ள பிரியம் ஆகியவை. இது தருமணை எல்லோறைவிடவும் உயர்த்தி காண்ப்பிக்கிறது.

வண்ணக்கடலில் ஒவ்வொரு முக்கிய கதாப்பாத்திரங்களும் எப்படி வளர்ச்சி அடைகிறது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அவரவர்களின் ஆணவத்திற்கு பெரிய பங்கிருக்கிறது. ஒரு கதாப்பாத்திரத்தின் அகங்காரம் இன்னொன்றால் சீண்டப்படுகிறது. பீமன் x துரியோதனன், கர்ணன் x  அர்ஜுனன், துரோணர் x துருபதன் என்று ஒருவரின் வளர்ச்சியை இன்னொருவர் முடிவு செய்கிறார்கள்.

ஆனால் தருமனுக்கு அப்படி யாரும் கிடையாது. அவனது பாதை அவனுக்கு பிறந்த உடனேயே கொடுக்கப்பட்டுவிட்டது. அவனுக்கான கல்வியை அவன் பாண்டுவிடமே கற்றுகொண்டாயிற்று. வண்ணக்கடலிலும் அதன் பிறகும் அவன் நிகழ் 'களத்தில்' பார்ப்பதெல்லாம் அவன் கற்றதிற்கான பயிற்சியே. வண்ணக்கடலில் எல்லோருக்ககும் ஒரு வண்ணம் தரப்பட்டது என்றால் தருமனின் வண்ணம் வெண்மை. அது பாண்டுவிலிருந்து அவனுக்கு கிடைத்தது.

ஹரீஷ்