Sunday, May 3, 2015

முதற்காலடி



திரௌபதி நகரத்திற்குள் நுழையும்போது அந்த சார்வாகர் வந்து பார்த்து நிற்கும் காட்சியை வாசித்தேன். ஒரு கணம் மெய்சிலிர்த்துவிட்டது. அந்தப்பழைய சார்வாகரேதான் அவர். அவரது குணமும் அவர் அன்றைக்குப்பேசிய தத்துவங்களும் நினைவுக்கு வந்தன. அதோடு அங்கே காம்பில்யத்தில் வந்த அந்தசூதரையும் நினைத்துக்கொண்டேன். திகைப்பாக இருந்தது..

அவர்களுக்கெல்லாம் என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கிறது இல்லையா? ஆனால் அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு மனுஷ வாழ்க்கை என்பது ஒரு பெரிய நாடகம் அதை சும்மா பார்த்துக்கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கு எதுவும் பெரியதல்ல

திரௌபதி அஸ்தினபுரியில் கால்வைத்தபோது ஒரு பெரிய சோர்வும் வருத்தமும்தான் எனக்கு வந்தது. அது அழிவு. ஆனால் அதை லட்சுமியின் வரவாக நினைத்துக்கொண்டாடுகிறார்கள். அந்த ஒரு காட்சியிலே எல்லாமெ இணைந்துவிடுகிறது. துருபதனின் வஞ்சம். அவளை முதல்முறையாக அவன் தீயிலே பார்த்தபோது வந்த பரவசம். எல்லாமே ஒரே நினைவாக வந்து அதிர்ச்சியை அளித்தன

ராஜம்