ஜெ
பாஞ்சாலி வருவதற்குமுன்னால் உள்ள நிகழ்ச்சிகளில் ஏன் கர்ணன் ஒதுங்கியிருக்கிறான் எனபதற்கு ஆசிரியர் என்ன நினைத்து அப்படி எழுதியிருக்கலாம் என்ற கோணத்தில் எழுதப்பட்ட குறிப்பை வாசித்தேன். அது ஒரு கோணம்தான்.
ஆனால் அதை விடமுக்கியமான காரனம் இன்றைக்கு நாவலிலேயே வந்துவிட்டது. கர்ணன் ஏன் அப்படி இருக்கிறான் என்றால் அதர்குக்காரணம் அவனால் பாஞ்சாலியை எதிர்கொள்ளமுடியாது என்பதுதன. ஆகவே எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிப்போய் குதிரைப்பண்ணையில் உட்கார்ந்துவிடுகிறான்
இனிமேல் என்னால் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளமுடியாது என்று கர்ணன் சொல்லும் இடம் மனதுக்கு மிகவும் துன்பம் தருவதாக இருந்தது. அவன் எங்கே ஓடினாலும் அவனுக்கு அவமானங்கள் மட்டும்தான் தேடித்தேடி வரும் என்பதுதான் விதி. ஒன்றுமே செய்யமுடியாது இல்லையா?
சாமிநாதன்