Saturday, August 5, 2017

உருமாறுவதில் உள்ள அழகு.






ஜெ
வெண்முரசு நாவல்களின் அழகுகளில் முக்கியமானது கதாபாத்திரங்கள் உருமாறுவதில் உள்ள அழகு. சுதேஷ்ணையின் கதாபாத்திரம் அபலையாகவும் பாஞ்சாலியிடம் அடைக்கலம்தேடுபவளாகவும்தான் முதலில் தோன்றியது. அவள் தன் வாழ்க்கைக்கதையைச் சொல்லும்போது திரௌபதி அடைக்கலம் அளிக்கிறாள்.

ஆனால் அந்த அடைக்கலத்தைப் பெற்றுக்கொண்டதுமே அவளுக்கு தாழ்வுணர்ச்சி வருகிறது. அதிலிருந்து திரௌபதிமேல் கசப்பு வருகிறது அதிலிருந்து திரௌபதிக்குத் தீங்குசெய்யவும் நினைக்கிறாள்

இதை நான் முன்பும் வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். நிமிர்வும் கம்பீரமும் உள்ளவர்களிடம் எளியவர்கள் உதவிகேட்டு அடைக்கலம் ஆவார்கள். ஆனால் அந்த உதவியைப்பெற்றுக்கொண்டதும் தாழ்வுணர்ச்சியால் அவர்களை வெறுக்கவும் செய்வார்கள்

மகாதேவன்