வணக்கம்
நான் சரண்
1 மாத விடுமுறையில் இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. பாஞ்சாலி தமயந்தியின் காட்டில் இருப்பது போல் இப்போது
நானும் சொல்வளர்க்காட்டில் இருக்கிறேன். பாண்டவர்கள் ஐந்து பேரும் அடுமனைப்பணியில் இருப்பதை
படிக்கிறேன் இப்போது.
அர்ஜுன் காய் நறுக்குவதிலும் மற்றவரகள் சமையலறைவேலை செய்வதிலும் கூட எனக்கு வருத்தமாக இல்லை
ஆனால் தருமர் பந்தி பறிமாறுவதும் எச்சில் இலை எடுப்பதும் கஷ்டமாக இருந்தது. முழுவதும் கேட்டு முடிக்க முடியாது என்றாலும் ,
இன்னும் கொஞ்சம் கேட்டு விட்டுத்தான் பள்ளிக்கு செல்வேன். அதன் பின் மாதம் ஒரு முறை
அம்மா விடுதிக்கு வரும்போது பள்ளிக்கு எதிரிலிருக்கும் கொடிமரத்தின் குட்டி மேடையொன்றின்
படிக்கட்டுகளில் உட்கார்ந்து சில அத்தியாங்கள் எப்போதும் போல கேட்டுக்கொள்வேன்.
இப்போது போனஸாக அம்மா
நள தமய்ந்தி கதை சொல்கிறார்கள். நளன் தமயந்தியை திருமணம் செய்வது பற்றி முன்பு நான்
கேட்டிருந்த எராளமான கதைளில் வரும் தேவர்கள்
நளனைப்போலவே மாற்றுருக்கொள்வது, பூ மாலை வாடாமல் இருப்பது, கண் இமைக்காதது, இவையெல்லாம்
வராமல் சாதாரணமாக கலயாணம் முடிந்துவிட்டது. ஆனால் இப்படித்தான் நடந்திருக்கும் என்று
நினைத்தேன். தேவர்கள் கதையெல்லாம் புனைவாயிருக்கும்
இருந்தாலும் நளன் அத்தனை அழைத்தும் அறைகூவியும் யாரும் சண்டைக்கு
வராமல் விட்டது அவமானமாயிருந்தது. யாராவது ஒருத்தராவது சண்டை போட்டிருக்கலாம். சரி
இனி மேல் நளனுடன் பெரிய சண்டை போட ஊழ் காத்திருக்கிறதே.
இன்னும் நளன் கதை
வருமா அல்லது இவ்வளவுதானா என்றும் தெரியாமலேதான் பள்ளிக்கு கிளம்புகிறேன்
ஜெ
uncleக்கு என் நன்றிகள்
அ.சரண்
அ.சரண்