அன்புள்ள அய்யா,
வெண்முரசைக் கொஞ்சம் மெதுவாக வாசித்து வருகிறேன்.
மழைப்படல் முடித்து கொஞ்சம் பெரிய இடைவெளி விட்டு வண்ணகடல் வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
மழைப்படல் தொடங்கியபோதே தேடத்தொடங்கிய விஷயம். வண்ணக்கடலில் தொடக்கமும் அதுவே.
பீஷ்மர்
செல்லும் தேவதானபுரம் துறைமுகம் இன்று எங்கு உள்ளது? சிந்து நதி கடலை
சேரும் இடத்தில் உள்ள தீவு? அப்படி ஒரு தீவு எங்கு உள்ளது அல்லது இருந்தது
எந்தது தேடி கிடைக்கவில்லை. ஒரு வேளை கராச்சி நகர்தான் தேவதனபுரமா? கராச்சி
நகருக்கு தேவதானபுரம் என்று பெயர் இருந்தாக தெரியவில்லை.
அதேபோல்
மதுரை தரைமுக நகரம் என்றும். மிகப்பெரிய துறைமுகம் என்றும். அங்கே குமரி
அன்னை கோவில் இருந்தது என்றும் மழைப்பாடலிலேயே சுட்டி இருந்தீர்கள்.
மீண்டும் வண்ணக்கடலில் விரிவாக விலக்கி இருக்கிறீர்கள். மீண்டும் குழப்பம்
அடைகிறேன்.மதுரை ஒரு தகுறைமுக நகர் என்று வேறு எங்கும் தரவுகள்
கிடைக்கவில்லை.கொற்கைதான் பாண்டியர் துறைமுகம் என்று எண்ணியிருந்தேன்.
கன்னியாகுமரியைக் குறிப்பிடுகிறீர்களா.அல்லது மதுரை அந்த காலத்தில் வேறு
இடத்தில் இருந்ததா?
நீங்கள் லெமூரியா கண்டதை எல்லாம் நமபாதவர் என்றே நினைக்கிறேன்.
காரணம்
இல்லாமல் தேவதானபுரம் மதுரை பற்றியெல்லாம் வெறும் கற்பனை நகரங்களாக
குறிப்பிட்டு இருக்க மாட்டீர்கள். தேடித் தேடி எங்கும் கிடைக்கத்ததாலேயே
தங்களிடம் கேட்கிறேன். நேரம் இருந்தால் மட்டும் பதில் தரவும்.
பணிவுடன்,
கணேஷ்
அன்புள்ள கணேஷ்
அது தேவபால புரம். இப்போது சிந்துவின் அழிமுகத்தில் கடலில் ஒரு தீவாக உள்ளது. தேவால் என்று பெயர்
மதுரை என அதில் குறிப்பிடப்படுவது தொல்மதுரை., அது துறைநகரம். கடலில் மூழ்கியது
ஜெ