அன்புள்ள ஆசிரியர்க்கு,
சொல்வளர்காடு
செம்பதிப்பு வாங்கி படித்து கொண்டு இருக்கிறேன். இதை இணையத்தில் படிக்க
ஆரம்பித்து அப்புறம் இப்போது தொடர்கிறேன். உண்மையில் மிகவும் செறிவான
படைப்பு. என் வரையில் இது விஷ்ணுபுரத்தின் தொடர்ச்சி என்றே கருதுகிறேன்.
அதில் வரும் தத்துவ விசாரணைகள் இதில் மேலும் கூர்மையுடன் வருகிறது. சில
மேல் அதிகமான புரிதல்களை உருவாக்கின.
கதைப்படி
பன்னிரண்டு படைக்கல நிகழ்வுக்கு பிறகு என்ன நடந்தது, மூத்தவரின் உள்நிலை,
பாஞ்சாலியின் தத்தளிப்புகள் மிகவும் அருமையாக உள்ளது. நான் பார்த்த மற்றும்
படித்த துரியோதன அரசர் மற்றும் சகுனி இதில் இல்லை.
உண்மையில்
மகாபாரதத்திற்கு தமிழில் மிக முக்கியமான மற்றும் தனிப்பெரும் படைப்பு
வெண்முரசு என்றால் அது மிகை அல்ல. பொன்னியின் செல்வன் படிக்கும் போது
அப்போது நாங்கள் இல்லையே என்று ஏங்கியது உண்டு. ஆனால் வெண்முரசு காலம்
கடந்து நிற்கும் அப்போது நான் சொல்லிக்கொள்வேன் இது எங்கள் காலத்து நூல்
என்று.
-திருமலை