Thursday, June 29, 2017

வெண்முரசு புதுகைக்கூடுகை பதிவு

26 ஜூன் 2017 அன்று நிகழ்ந்த புதுவை வெண்முரசு கலந்துரையாடல் கூடுகைக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர் . திரு.பாவண்ணன் அவர்களை வரவேற்று நான் பேசியதை இத்துடன் இணைத்துள்ளேன்


கிருபாநிதி அரிகிருஷ்ணன்
அன்புள்ள நண்பர்களே ,……வணக்கம் .

இலக்கிய கூட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருவது , பழைய ,நவீனத்துவம் ,பின்நவீனத்துவம்  என பலதலைப்புகளில் அவை தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கின்றன . அவை பெரும் மக்கள் திரளை நோக்கி பேசியபடியே உள்ளது . மனித மேம்பாட்டிற்கானது இலக்கியம் . இலக்கியம் பல்வேறு கூறுமுறையில்  புனைவிலக்கியமாக பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன . இந்திய வரலாற்றையும் ,புராண , இதிகாசங்களை ஒட்டிய புனைவுகளும் இங்கு ஏராளமாக வாசிக்க கிடைக்கின்றன . அவை இதிகாச அடிப்படையான புணைவிலக்கியமாக உருவெடுக்கும் தொரும் வாசகர்களாலால் மிக அனுக்கமாக உணரப்படுகின்றன. அவை அவ்வப்போது மேடைகளில் எதிரும் புதிருமான கருத்து மோதல்களாக எதிரொலித்தபடியே இருந்திருக்கிறது . அதை போன்ற ஒரு இலக்கிய கூடுகையா இது என்றால் . அல்ல. இது மாறுபட்டது.

இதிகாசங்களை மறுஆக்கம் செய்யவேண்டியது அவசியமா என்றுதான் இந்த கூடுகையும் தொடங்கியது . திரு.பாவண்ணன் அவர்கள் சுதந்திர காலத்தில் இதிகாசங்கள் மறுவாக்கம் செய்யப்பட்டன என்றார். இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அவ்வாறு புணைவிலக்கியமாக இயற்றுவது சாத்தியமில்லை என்றார். ஆம் . அது சாத்தியமில்லைதான் . ஆனால் மஹாபாரதம் என்னறிந்த புணைவாக வெளிவந்தபடியேயிருப்பதற்கு அதன் பல கூறுகள் மக்களின் இன்றைய வாழுமுறைக்கோ அல்லது மனோதர்மத்திற்கோ மிக அனுக்கமாக இருப்பதே காரணம்

என்னை பொறுத்தவரை பெரும்திரளாமக்களை மக்களை நோக்கிய பேச்சே பின்நவீனத்துவ இலக்கிய காலகட்டத்தில்தான் . யாரை நோக்கி அது பேசப்படுகிறதோ அவர்கள் அதை படிக்கிறார்களா அல்லது அவர்களை சென்று சேர்கிறதா என பார்க்க வேண்டியது ஒரு படைப்பாளிக்கு தேவையற்றதுதான் . சொல்ல வேண்டியவை சொல்லிற்றாயிற்று . காலம் அதை உரியவரிடத்தே உரிய காலத்தில் கொண்டு சேர்க்கும்

இந்த போக்கு இன்றைய தேடல் மிகுந்த மனித பெருக்கின் செவிகூர துவங்குவதற்கு முன்பு சொல்லப்பட்டதாக இருக்கலாம் . எப்போதும் அதையே அடிப்படை எனக்கொள்ள முடியாது .சமூகத்தில் எண்ண மாற்றங்கள் ஏற்பட்டவாறே அது காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது . சமூகத்தின் மீது நம்பிக்கையிழந்தவர்களின் வருத்தம். எல்லா காலத்திற்குமான பொது விதி என ஒன்றில்லை .

நிகழ் காவியமான வெண்முரசு அது ஏழுதப்படுகிற காலத்தே அதை விமர்சிக்கிற அல்லது ரசிக்கிற அமைப்பாக இன்று சில  உருவாகி வருகிறது . அதில் இந்த அமைப்பும் ஒன்று . வெகுஜன கவனிப்பு கிடைத்திருக்கிறது . அதற்கு பல காரணம் இருக்கலாம் , உதாரணத்திற்கு ஊடகம் . திரு. ஜெயமோகனின் திரைப்படத்துறைத் தொடர்பு அல்லது அவர் வலைத்தளம் கையாளும்முறை எனக்கூறலாம் . நான் நினைப்பது வேறு ஒரு காரணம் . மக்களிடையே புழங்குகிற இலக்கியம் இரண்டு .பக்தி இலக்கியம், மற்றும் மொழி இலக்கியம்

பக்தி இலக்கியம் பல்வேறு காரணங்களால் இலக்கிய பெரும்பாண்மை எழுத்தாளர்களால் எள்ளல் செய்தே எழுதப்பட்டன , அவை பெறும்பாலும் பெரியாரிகள் அல்லது மார்க்சியர்களால் பேசப்படுபவைகள் . அவை எப்பவுமே மக்கள் திரளின் நம்பிக்கைகளின் மேல் கல்லெறிபவை . ஒரு தலைகீழ் மாற்றத்திற்கு அறைகூவுபவை . சொல்லபவர்கள் யார் என மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . அத்தகைய இலக்கிய எழுத்தாளர்கள் திராவிட அரசியல் தலைவர்களை மேடையில் தென்படுவதாலேயே அவை அதன் மதிப்பை ஒருகாலமும் பெறப்போவதில்லை . அவர்கள் பேசுவது ஆகப்பெரும் உண்மையாக இருந்தாலும்கூட. ஆகவே இலக்கியம் பொதுமக்களுக்கானதல்ல நுண்கூர்மதியாளருக்கு எனக் கூறுவது இன்று பொருந்தாது.

பக்தி இலக்கியத்திற்கு இன்றும் மக்கள் திரள் கூடுவதாலேயே அவர்கள் சொல்வதையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உண்மையல்ல . அங்கும் பக்தியும், பக்திஇலக்கியமும் வேறுவேறாகத்தான் பார்க்கப்படுகிறது . மூட பக்தியிலிருந்து வெளிவரக்கூடிய புதிய தலைமுறை உருவாகிவருகிறது. என்பதற்கு நவீன குருநிலைகளின் எழுச்சியே சிறந்த உதாரணம் . ஆச்சாரமும் அதை இன்று அனுஷ்டிக்கப்படுகிற முறைமையும்  பெரும் மாற்றத்திற்குள்ளாகிவருவதை புரிந்து கொள்ளாது ,வழமையான தாக்குதல் தொடுப்பதாலேயே பேற்பசுபவர்களும் பேசப்படுபவைகளும் பொருளிழந்து விடுகின்றன . சமயப் பெரியவர்களிடம் கூட இந்த மக்கள் திரளுக்கு சொல்லக்கூடுவது தெரிந்திருந்தும் , பேசுதலால் நிகழக்கூடிய பெரும் அடையாளச்சிக்கல் உருவாக்கக்கூடும் அதலால் அவர்களும் செய்வதறியாது திகைக்கிறார்கள்.

கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் , இந்துத்துவாக்கள் சொல்லும் இந்துக்களின்  அக்கால விஞ்ஞான பெருமைகள் எவையும் இன்று எடுபடும் நிலையில் இல்லை . அதற்கான ஆதாரமாக வேத காலத்தை காட்டிக்கொண்டிருக்க முடியாது . அதுபற்றி ஆதரித்தும் எதிர்த்தும் செய்யப்படுகிற பிரச்சாரம் மக்கள் திரளை சென்று தொடவேயில்லை என்பதே நடைமுறை உண்மைமக்களின் நம்பிக்கையை மட்டம்தட்டி பேசுபவர்களினால் இதுவரை  ஆவேசமடைந்தவர்கள் மத்தியில் இன்று அதை ஆதரித்து பேசுபவர்களால் ஆசுவாசமடைந்திருக்கிறார்கள்

அதை தங்களுக்கான ஆதரவாக அவர்கள் பார்ப்பதும் எடுபடாது என்பதும் உண்மை . உலக லட்சியவாத தோல்விக்கு பிறகு பெரும் உபதேசங்களால் எதையும் மாற்றியமைக்க முடியாது என்பது இந்தியாவில் மட்டுமல்லாது உலக போக்கும் அதையே அறிவிக்கிறது . இந்த காலகட்டத்தில் வெண்முரசு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது அல்லது வருங்காலத்தில் ஏற்படுத்தும் என்று என்னை கேட்டுக்கொள்கிறேன்

இது தவிர்க்கவியலாத ஒரு படைப்பு பலவித கோணங்களில் பார்க்கப்படவேண்டியது அதில் சொல்லப்படுபவைகளை மிக நுட்பமாக, நிதானமாக இந்த கூடுகைகளில் மாதம்தோரும் முன்வைத்து வருகிறோம்  . ஆகவே அதை பற்றிய கருத்தல்ல நான் இந்தக் கூறுகையில்  சொல்ல விழைவது . எந்த முறையில் எப்படிப்பட்ட சூழலில் இது வெளிவருவதால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்


ஜெயமோகனுடைய ஆழமான இந்து ஞான மரபு பற்றிய தகவல்கள் நுட்பங்கள்  ஒரு மைய சரடாக , தொகுப்பாக அவரின் பெரும்பாலான ஆக்கங்களில் பார்க்கிறேன் . எந்த ஒரு முயற்சிக்கும் ஒருங்கிணைப்பு தன்முனைப்பு தொடர்முன்வைப்பு போன்றவை இன்றியமையாதது . அவரின் தத்துவபோக்கு கூறுமுறை , இளைஞர்களால் ஏற்கப்படல் போன்றவையும் ,பெரியாரிகளையும் ,மாக்சியர்களையும். அணுகாது தனியான முன்வைப்பாக அவரின் கருத்துக்களை பார்க்கிறேன் . அதுவே அவரின் தனி அடையாளமாக வெண்முரசில் வெளிப்பட்டவண்ணம் இருக்கிறது.

உலகப்போக்குடன் ஒத்துப்போகாத எதையும் அவர் முன்வைக்கவில்லை என நினைக்கிறேன் . அதனாலேயே அவை முக்கிய தரவுகளாக வெளிப்படுகின்றன. அவரின் எழுத்துமுறை ,சொல்வளம் , தனியானதாக பார்க்கப்படுகிறது . அவர் சொல்வதை முழுவதும் நீ ஏற்றுக்கொள்கிறாயா என்றால் ,இல்லை . நானும் பெரிதாக முரண்படுகிறேன் ஆனால் அத்துடன் எனக்கு ஆத்மார்த்தமான உரையாடல் நிகழ்வதாக நான் உணர்கிறேன் . அவற்றிலிருந்து எனக்கு கிடைக்கும் திறப்புகள் அளப்பரியவை . எனக்கான கருத்தையும் நம்பிக்கையும் நான் இழந்து அவரை பின்பற்றவேண்டிய தேவை இல்லாமல் அவரின் எழுத்துக்களில் இருந்தே என்னையும் என் எனக்கான நம்பிக்கைகளை அடையாளங்களையும் என்னால் கண்டடையமுடிகிறது . அவை என்னை நான் கலைக்காமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது

என்னால் பார்க்கக்கூடிய புரிந்துகொள்ள கூடிய நம்பிக்கைகளின் தொகுப்பாக அவரின் எழுத்துக்களை நான் பார்க்கிறேன் . நிச்சயமாக என் போன்றவர்களுக்கு இவை அறிய நுட்பாங்களை விளங்குபவை . ஸம்ஸ்கிரத மூலத்திலிருந்து என்னால் கிரஹிக்க இயலாதவைகளை இங்கு கண்டடையமுடிகிறது. ஒரு அறுபது வருட தடையை இது உடைத்து வீசுகிறது . நவீன சிந்தனையாளர்கள் தனியர்கள். ஆன்மீக சிந்தனையாளர்கள் வெவ்வேறானவர்கள் என்கிற கூற்றையும் அது தகர்க்கிறது .

இதிலும் முரண்படுகள் இல்லையா என்றால் , இருக்கிறது. ஆனால் அந்த முரண்பாடுகளுடன் உரையாடும் வாய்ப்பையும் அதுவே ஏற்படுத்தித் தருகிறது . நான் கடந்த இருபதாண்டுகாலம் இயங்கிக்கொண்டிருந்த தளத்தில் நின்றபடியே நிச்சயம் இது தன்னுடைய உரையாடலை என்னுள்  நிகழ்த்தமுடியும் . இந்து சானாதன மதம்  தர்க்கத்திற்கு இடமளிப்பதைப்போல் பிறிதொரு மதம் அளிப்பதில்லை . அதைப்போன்ற இடைவெளிகளினூடே என் ஆழ்மனப் படிமங்களுடன் அது தொடர்ந்து தர்கித்த படியே என்னை மீட்டெடுப்பதாக உணர்கிறேன்.

மதம் “ .அது கெட்டவார்தையல்ல . அது ஜெயமோகன் சொல்வதைப்போல மதத்தை ஒதுக்குவதால் மொழி ,தத்துவம் பண்பாடு அனைத்தயும் இழக்கவேண்டிவரும் , அதன் வழியாகத்தான் இந்த சமூகத்திற்கு அதை சொல்லி நிறுவி வந்திருக்கிறது . இன்று இன்னும் மிச்சமாக காணப்படுகிற அறம் ஒழுக்க நிலைகள் மற்றும் பண்பாடுகள் ,இந்திய தண்டனைச் சட்டத்திற்கும் , பல சதுர கிலோமீட்டருக்கு ஒன்று என இருக்கும் காவல்நிலையத்திற்கு பயந்தோ அது நிலைநிற்ககவில்லை. அது தன் ஸ்வாதயாயத்தில் நிற்கிறது. இன்றைய தேவை அதை நவீன உலகப்போக்குடன் எப்படிப் பொறுத்திப்பார்ப்பது என்பதுதான் . அதைத்தான் சரியாக மற்ற புணைவுகளில் சொல்லப்படவில்லை. அல்லது சொல்லபட்டவை பொதுவெளியில் கவனிக்கப்படவில்லை .
வெண்முரசு அதற்கான தேவை உணரப்படுகிற காலத்தில் எழுதப்படுவதால் மற்ற புணைவு இலக்கியங்கிங்கள் தொடாத எல்லைகளை இது தொடக்கூடும்.அத்தகைய நுட்பங்களுக்கு பெருமளவில் விடையளிக்கிறது வெண்முரசு

இதிகாசங்களை சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றம் சாட்டப்பட்டலாம். இது ஒரு யுக்தி எனச்சொல்லலாம் . மூலத்துடன் வேறுபடுகிறது என்கிற கூப்பாடுகளும் எழலாம் அனைத்தும் புறம்தள்ளபடவேண்டியவைகளே . இது இதிகாசங்களில் காணப்படுகிற இடைவெளியை நிரப்புகிறது. என்போன்ற வாசகர்களுக்கு அவரின் வெண்முரசு சொல்லுவதைப்போலபெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது 

சொல்லப்படாத சொல். அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி 
பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றார்” அவை என்னை என் இருப்பில் நிறுத்தி, சொல்ல முடியாத பரவசத்தை கொடுக்கிறது. 

வெண்முரசு குறித்த என் நம்பிக்கை இரண்டு. விஷயம் அபாவத்திலில்லாது பாவத்தில் வராது . திரு.ஜெயமோகன் தன் வெண்முரசு புணைவிலக்கியத்திற்கு  தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டதையும் அது   தன்னை தானே வடிவமைத்துக்கொள்வதை வரிசையாக வெளிவரும் நாவலுக்கு நாவல் வாசிக்கும் போது , தனக்கான பாதையை அது நிகழ்த்திக்கொள்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் . இது என்போன்றவர்களுக்கானது .இந்த நூல் வரவேற்கத்தக்கது.மற்ற புணைவுகளுடன் இதை ஒப்புநோக்குவது பிழை.