அன்புள்ள ஜெமோ
வெண்முரசின் இந்த
அத்தியாயத்தில் சகதேவன் அரிஷ்டநேமியாக ஆகும்தருணம் ஒருவகையான மனக்கலக்கத்தை ஏற்படுத்தியது.
மிக எளிமையாக அவன் தன் உறவுகளை அறுத்துக்கொள்கிறான். நகுலனை தானே கொன்றதாகச் சொல்கிறான்.
எப்போதும் அவன் அந்தத் துறவுமனநிலையிலேயே இருந்திருக்கிறான். அவன் ஐவரில் ஒருவனே அல்ல
என்று தோன்றியது
சத்யா