மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு....
சிலபல காரணங்களால் வெண்முரசு கொஞ்ச நாள் வாசிக்க இயலவில்லை. பத்துநாட்களாக தொடர்ந்து வாசித்து இடைநின்ற கிராதம் மற்றும் மாமலரை முடித்தேன்.எவ்வளவு தரிசனங்கள். நன்றி....
வெற்றி சிறுகதை இன்றுதான் வாசித்தேன்.. நான் வாசித்த பல சிறுகதைகளில் ஒருசிலவே ரசித்துக்கொண்டே படபடப்போடு வாசித்திருக்கிறேன். அதில் ஒன்று வெற்றி. ஆனால் அந்த முடிவு அருமை...
.
நன்றி..
பிரின்ஸ்
அன்புள்ள பிரின்ஸ்
பலர் இவ்வாறு வேலைப்பளு காரணமகா விட்டுவிடுவதுண்டு. அவர்கள் வந்துசேர்ந்துகொள்ள பெரிய தடையேதுமில்லை. ஓரிருநாட்கள் தனியாக ஒதுக்கினால்போதும். நன்றி உடன்பயணிகளே இதை எழுதச்செய்கிறார்கள்
ஜெ